தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் ஏர் பூட்டி வயல் உழும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. 

இது தொடர்பில் அவருடைய முகநூல் பக்கத்தில் குறித்த படங்களுடனான பதிவொன்று இடப்பட்டுள்ளது.

இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இராசயானப் பொருள் பற்றாக்குறையை தொடர்ந்து நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள்...

Posted by M. A. Sumanthiran on Sunday, October 10, 2021


 "இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இராசயானப் பொருள் பற்றாக்குறையை  தொடர்ந்து   நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர்.

 காலபோக விதைப்பு தொடங்கியுள்ள நிலையில் உழவர்களின் உரப்பிரச்சினையை  வெளிச்சமிட்டு காட்டும் வகையில்  எம். ஏ. சுமந்திரன் கிளிநொச்சி கண்டாவளை உள்ள  தன்  பூர்விக வயலை  சம்பிரதாய பூர்வமாக உழுது, விதை விதைத்திருந்தார். இப்  பிரச்சினை குறித்து விவசாயிகள்  சார்பில் சுமந்திரன் தொடர்ந்து குரலெழுப்புவார்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Siyane News)

 


 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.