கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பிரியந்த இஹலேபெரும, எவ்வித காரணங்களும் இன்றி ராகம வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதனை எதிர்த்து இன்று (18) வைத்தியசாலை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பிரதேச சமய தலைவர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், வைத்தியசாலை மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்ததோடு பிரதிப் பணிப்பாளரின் சேவை தொடர்ந்தும் கம்பஹா வைத்தியசாலைக்கு தேவை என்று கோரிக்கை விடுத்தனர். (Siyane News)