கொல்லுரே நீக்கம் : கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தவிசாளராக ஆளும்கட்சி எம்பி!

Rihmy Hakeem
By -
0

ஸ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தவிசாளராக பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்கவை நியமிப்பதற்கு அக்கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளராக இருந்த வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே பதவியில் இருந்து நீக்கப்பட்டதனை தொடர்ந்து வெற்றிடமான குறித்த பதவிக்கு, உப தவிசாளராக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க பதில் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜா கொல்லுரே நீக்கப்பட்டமைக்கு பிரதான காரணமாக அவர் அண்மையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களின் சம்பளத்தை வெட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்த கருத்தே காரணம் என்று தெரியவருகிறது. 

 (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)