ஓட்­ட­மா­வடி – மஜ்மா நகர் கொவிட் மைய­வா­டியின் செயற்­பா­டு­களை முடி­வுக்கு கொண்­டு­வ­ருதல் தொடர்­பான தீர்­மானம் இன்று நடை­பெ­ற­வுள்ள பிர­தே­ச­சபை அமர்வில் மேற்­கொள்­ளப்­படும் என ஓட்­ட­மா­வடி கோற­ளை­பற்று மேற்கு பிர­தே­ச­சபைத் தவி­சாளர் ஏ.எம். நெளபர் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

இன்று வியா­ழக்­கி­ழமை மைய­வா­டியின் செயற்­பா­டு­களை நிறுத்­திக்­கொள்­ள­வுள்­ள­தா­கவும், அதனால் மைய­வா­டிக்­கான மாற்­றுக்­கா­ணி­யொன்­றினை இனங்­கண்டு ஏற்­பாடு செய்­யு­மாறும் ஓட்­ட­மா­வடி கோற­ளைப்­பற்று மேற்கு பிர­தேச சபை கொவிட் செய­ல­ணி­யையும், சுகா­தார அமைச்­சையும் மூன்று வாரங்­க­ளுக்கு முன்பு கோரி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. கடிதம் மூலம் இக்­கோ­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் சுகா­தார அமைச்­சி­ட­மி­ருந்து இது­வரை பதில் ஏதும் கிடைக்கப் பெறாத நிலை­யிலே இன்­றைய பிர­தேச சபை அமர்வில் இது தொடர்­பான இறு­தித்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது எனவும் பிர­தேச சபைத் தவி­சாளர் ஏ.எம்.நெளபர் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் மஜ்­மா­நகர் மைய­வா­டியில் மேலும் சுமார் 300 ஜனா­ஸாக்­களை நல்­ல­டக்கம் செய்ய முடியும். தற்­போது தினம் 4 அல்­லது 5 ஜனா­ஸாக்­களே நல்­ல­டக்­கத்­துக்­காக எடுத்­து­வ­ரப்­ப­டு­கின்­றன. என்றாலும் மையவாடி செயற்பாடுகளை நிறுத்திக் கொள்வது தொடர்பில் பிரதேசசபை இறுதித்தீர்மானம் மேற்கொள்ளும் என்றார்.

ஏ.ஆர்.ஏ.பரீல் - விடிவெள்ளி 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.