ஜாஎல, போபிட்டிய புனித நிகொலாஸ் தேவாலயத்திற்கு கடந்த 28 ஆம் திகதி வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு தகவல் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன விளக்கமளித்துள்ளார்.

அத தெரண ´BIG FOCUS´ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு பாண் விற்பனை செய்யும் நபர்களிடம் இருந்து கூட தகவல்கள் கிடைக்கின்றதாகவும் அந்த தகவல்களை உதாசீனமாக பார்ப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிடைக்கும் தகவல்களை ஆராய்ந்து அதில் இருந்து புலனாய்வு தகவல்களை பெற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனை ஆராய்ந்து முடிக்கும் வரையில் காத்திருக்க முடியாத காரணத்தினால் அறிவிப்பதை போன்றே அன்றைய தினம் குறித்த தேவாலயத்திற்கு அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அததெரண


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.