பாரதீய ஜனதா கட்சியின் (BJP) தோற்றத்தோடு இந்திய அரசியலை #இந்துத்துவ #மதவாதத்தை புறந்தள்ளி நகர்த்த முடியாமலிருக்கிறது. அதனால், இனப்பாகுபாடும், சாதி வேறுபாடும், தீண்டாமை திணிப்பும், மத வெறுப்புவாதமும், மதக்கலவரங்களும் இந்தியா பூராகவும் எந்தக்கணமும் பற்றிக்கொள்ளும் தீயாக இருந்துகொண்டேதான் இருக்கிறது.

இதற்கு சற்று மாற்றமாக, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் மற்றும் தமிழ் நாடு என்பன அமைந்திருக்கின்றன. 

அதற்கு காரணம்;

✅ மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பரனாஜியின் #தந்தை #ஒரு #சுதந்திர #போராட்ட #வீரன் என்பதோடு - மம்தா பரனாஜி தனது master degree யை #Islamic #Historyயில் செய்துள்ளமை

✅ கேரளா இடதுசாரி சிந்தனைக்கு ஆட்பட்ட மாநிலம். முதலமைச்சர் பிரனாய் விஜயன் ஒரு #இடதுசாரி #சிந்தனையில் வளர்ந்தவர். 

✅ தமிழ்நாடு பெரியாரின் #திராவிடர் #சிந்தனையிலும் - அண்ணாவின் #பகுப்பறிவுவாதத்திலும் வழிநடாத்தப்பட்ட மாநிலம் என்பதோடு - தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்ற மாறி மாறி ஆளுங்கட்சிகள் இந்த வழியில் வந்துள்ளமை.

இதில், மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் இந்துத்துவ சிந்தனை ஓரளவு வளர்ச்சியடைந்து மம்தாவிற்கும் விஜயனுக்கும் பெரும் சவாலாக எழுந்து நிற்கின்றன. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதனை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. ஆனால், தமிழ் நாட்டில் நிலைமை அப்படியல்ல.

அது ஒருபு றமிருக்க, தமிழ் நாட்டில் 40 பாராளுமன்ற ஆசனங்கள் இருக்கின்றன. இந்த ஆசனங்கள் - மத்தியில் யார் ஆட்சியமைப்பது என்பதை தீர்மானிக்கும் சக்தியுடையவை. 

பிரதமர் மோடியின்;  

பொருளாதார கொள்கைத் தோல்வி, கார்ப்பரேட் நிறுவனங்களுடனான உறவு, அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் நடைமுறைகள், கொரோனா பெருந்தொற்றை கையாள்வதில் விட்ட தவறு, விவசாயிகளுக்கு எதிரான வேளாண்மை சட்டங்கள், குடியுரிமை சட்ட திருத்தம் என்பன ஏற்படுத்தியிருக்கும் எதிர்மறை மக்கள் அபிப்பிராயம் - BJP #அடுத்த #தேர்தலில் #ஆட்சியை #பிடிக்க #முடியுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.

எனவே, அடுத்த வருடம் சூடுபிடிக்கப்போகும் நாடாளுமன்ற தேர்தலில்  BJPயை பொறுத்தவரை ஒரு ஆசனம் கூட மிகப்பெறுமதியானதாக அமையப்போகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள 40 ஆசனங்களில் முடிந்ததை சுருட்டிக்கொள்ள முயற்சிக்கிறது. அதற்கேற்றாற் போல காய்களையும் நகர்த்துகிறது. 

அதில் ஒன்றே ஈழத்தமிழர் பிரச்சினை மீதான இந்திய அரசின் இன்றைய அக்கறை. 13 வது திருத்தத்தை முற்றாக அமுல்படுத்தல், நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை நடாத்துதல் என்பனவும், தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலை நிறுத்துதல் என்பனவும் மிக முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன. 

இதற்கு அரசியல் தரகர் வேலை (Political brokering) செய்வதற்கு அனுப்பப்பட்டவரே - தமிழ் நாட்டு பின்னணியை கொண்டவரும் BJP யின் நம்பிக்கைக்குரியவருமான சுப்ரமணிய சுவாமி. இலங்கை அரச குடும்பத்தோடு மிக நீண்டகால உறவை கொண்டிருக்கும் இவர் - ஈழத்தமிழர் விவகாரங்களில் எப்போதும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர். அவரே BJPக்காக இன்று தரகர் வேலை பார்க்க இருக்கிறார். தவிர #இது #தமிழர் #மீதான #உண்மையான அக்கறையல்ல.

இலங்கை அரசிற்கும் வேறு வழியில்லை. அடிபணிந்துதான் ஆக வேண்டும். இந்தியாவின் உதவியில்லாமல், அமெரிக்காவையும், ஐரோப்பிய நாடுகளையும் சமாளிக்க முடியாது. ஐ.நா மனித உரிமை ஆணைய தீர்மானங்களிலிருந்து தப்பிக்க வும் முடியாது. எனவே, இந்திய நலன்களிடம் இலங்கை மண்டியிடத்தான் போகிறது.

கேள்வி என்னவெனில்...

இவ்வாறு இந்திய நலன்களிடம் இலங்கை அரசு மண்டியிடுகையில் - இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

பதில் நாளை. இன்ஷா அல்லாஹ் 


ஏ.எல்.தவம், 

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் 

https://www.facebook.com/622830177752450/posts/4487430077959088/

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.