- ஐ. ஏ. காதிர் கான் -

   அத்தனகல்ல - ஊராபொல பகுதியில் உள்ள தளபாட உற்பத்தி தொழிற்சாலை ஒன்றின் களஞ்சிய சாலையொன்றில் பாரிய தீ ஏற்பட்டுள்ளது.

   தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லையென, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

   சுமார் 2 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட குறித்த களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால், அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கதிரைகள் (சோஃபா) உள்ளிட்ட மேலும் பல பொருட்கள்  தீக்கிரையாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

   தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு,  சம்பவ இடத்துக்கு  தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டதாகவும், தீயணைப்புப் பணிகள் தீவிரமாக  முன்னெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

( I. A. Cadir Khan )

21/10/2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.