இம்முறை கிராமிய மட்டத்தில் பல்வேறு தரப்பினரின் முன்மொழிவுகளை கருத்தில் கொண்டு மிகவும் சிறந்த ஒரு வரவு செலவு திட்டத்தை முன்வைப்பதற்கு நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ச நடவடிக்கை எடுத்து வருவதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

வத்தளை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்காக சமய தலைவர்கள், கிராமங்களிலுள்ள மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், கிராம கமிட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து முன்மொழிவுகள் பெறப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வரவு செலவு திட்டத்திற்காக கிராமிய மட்டத்தில் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளும் போது கிராமங்களில் செயற்படுத்தப்பட வேண்டியது பொருளாதார முன்மொழிவுகளா? வாழ்வாதார அபிவிருத்தியா? நலன்புரி சேவைகளா? என்று சரிவர இனங்காணக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்டமொன்றின் போது கிராமிய மட்டத்தில் முன்மொழிவுகளை வரவேற்பது இது வரலாற்றில் முதல் தடவையாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.