இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய உற்பத்தியான ஹைலன்ட் பால் மாவின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், 400 கிராம் ஹைலன்ட் பால்மாவின் விலை 90 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் ஹைலன்ட் பால்மாவின் விலை 225 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 400 கிராம் ஹைலன்ட் பால்மாவின் புதிய விலை 470 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் ஹைலன்ட் பால்மாவின் புதிய விலை 1170 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.