(ரிஹ்மி ஹக்கீம்)

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களை தொடர்புபடுத்துவதற்கான கிரிந்திவெல, மெத்தேகம, ஹிஸ்வெல்ல பாலத்தின் கட்டுமானப் பணிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வரப்பட்டு பணிகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் நாட்டில் 400 பாலங்களை அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் கடந்த ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 

அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பழைய பாலம் அகற்றப்பட்ட போதிலும் மக்களுக்கு மாற்றுவழியாக தற்காலிக பாலம் கூட அமைக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலகவின் மற்றும் மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உபாலி கொடிகார ஆகியோரின் தலையீட்டில் குறித்த பாலத்திற்கான டென்டர் செல்லுபடியற்றதாக்கப்பட்டு பாலத்தை விரைவாக அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.