T20 உலகக்கிண்ண போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன!

Rihmy Hakeem
By -
0

 


2021 ஆண்டின் T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று  (17)  முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானில் நடைபெறுகிறது.

இதன் தகுதிச் சுற்றுப் சுற்றுப் போட்டிகளின் முதலாவது போட்டியில் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று ஆரம்பமாகிறது.

முதலாவது போட்டி இன்று பிற்பகல் 3.30 ற்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் பப்புவா நியுகினியா அணியும் - ஓமான் அணியும் மோதவுள்ளன.

8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தகுதிச் சுற்றில் 4 அணிகள் வீதம் இரண்டு குழுக்களாக போட்டிகள் இடம்பெறும்.

குழு A 

இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா 

குழு B 

பங்களாதேஷ், ஓமான், ஸ்கொட்லாந்து, பப்புவா நியுகினியா 

பிரதான சுற்று எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

குரூப் 12 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் எதிர்வரும் 24 ஆம் ஆம் திகதி மோதுகின்றது. இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனிடையே இத்தொடரில் இந்திய அணி புதிய ஜெர்ஸியில் விளையாடு உள்ளது . இந்த புதிய ஜெர்சியை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது. அதோடு 18 ஆம் திகதி இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது .

கடந்த 2007 ஆம் ஆண்டு ஆரம்பமான T20 கிரிக்கெட் உலக வெற்றி க்கிண்ண போட்டியில் முதன் முறையாக இந்தியா வென்றது.

2009ம் ஆண்டு பாகிஸ்தான், 2010 ஆம் ஆண்டில் இங்கிலாந்தும், நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் 2012 ஆம் ஆண்டு, 2014 ஆம் ஆண்டு இலங்கையும் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு 5 ஆண்டுகள் இடைவெளியில் நாளை 7 வது T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன.

குரூப் சுற்றுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 22 ஆம் திகதி வரை நடைபெறுகின்றன. சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் 24 ஆம் திகதி தொடங்குகின்றன.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)