அநுராதபுரம், அம்பாறை, அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி மாவட்டங்களில் கொரோனா கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் நிலைமை மோசமடையலாம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பிரதேசங்களில் சுகாதார வழிகாட்டுதல்களை மீறி இடம்பெற்ற திருமணங்கள், மதநிகழ்வுகள் ஏனைய நிகழ்வுகள் காரணமாக குறித்த கொத்தணிகள் உருவாகியுள்ளதாக எனவும் அவர் தெரிவித்துள்ளார்.