சகல தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து எதிர்வரும் 09ம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியத்தினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பு – லிப்டன் சுற்று வட்டத்தில் எதிர்வரும் 09ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க தாம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும்  தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.