கிண்ணியாவில், குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் தற்காலிக படகுப்பாதை கவிழ்ந்ததில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் பாடசாலை செல்லும் மாணவர்களாவர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த பாலத்தை நிர்மாணிக்க முன்னர் அதற்கு தற்காலிக பாதை ஒன்றை நிர்மாணிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று இராஜாங்க அமைச்சரிடம் அன்று நான் கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்தில் அவர் அதனை நக்கலாக எடுத்துக்கொண்டார். ஆனால் இன்று பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு விபத்து அரசின் அசட்டை காரணமாகவே நடந்துள்ளதாக சபையில் சுட்டிக்காட்டினார். 

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முறையான அனுமதியுடன் அந்த படகுச் சேவை நடைபெறவில்லையென்றும் அதுவே அசம்பாவிதத்திற்கு காரணம் என்றும் அது தொடர்பில் சற்று தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். (Siyane News)

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் மறுமை வாழ்வுக்காக எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம். இந்த விபத்து தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போது.

Posted by Imran Maharoof on Monday, November 22, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.