சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக, முழு உலகத்தையே அச்சுறுத்தலுக்குள்ளாக்கி கொண்டிருக்கும் Corona Virus பரவலின் காரணமாக எமது நாட்டிலும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும், மாணவர்களின் விளையாட்டு நடவடிக்கைகளும் ஒரே இடத்தில் முடங்கியிருந்தன.

அதே போல, கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் பிரத்தியேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த Karate வகுப்பும் இடை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2021ஆம் ஆண்டில் சுமார் 44 நாடுகள் பங்குபற்றிய International Global Virtual Championship 2021 Karate சுற்றுப்போட்டியில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற பிரத்தியேக வகுப்பில் பங்குபற்றிய மாணவர்கள் நான்கு பதக்கங்களை வென்றிருக்கின்றார்கள்.

கஹட்டோவிட்டவை சேர்ந்த எம்.என்.அம்ஜத் வெள்ளிப் பதக்கத்தையும் எப்.ஏ.ஹம்தி மற்றும் ஓகொடபொல பிரதேசத்தை சேர்ந்த எம்.ஆர்.எம்.ஸாயித், உடுகொடையை சேர்ந்த ஸிஹான் ஆகியோர் வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல் : பயிற்றுவிப்பாளர் ரம்ஸான்கருத்துரையிடுக

Blogger இயக்குவது.