சீரற்ற காலநிலை காரணமாக குருநாகல் மாவட்டத்தில் 12 பிரதேச செயலாளர் பிரிவில் 560 குடும்பங்கள்  பாதிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட மேலதிக செயலாளர் ஜீ.ஏ. கித்சிரி தெரிவித்தார்.

சீரற்ற கால நிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

40 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 1693 நபர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அலவ்வ பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கு வெனன்தருவ பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாரம்மல், பொல்கஹவெல, அளவ்வ,பன்னல, பிங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள அனர்த்த நிலை காணப்படுகிறது.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.