(ரிஹ்மி ஹக்கீம்)

பஸ்யாலை - கிரிஉல்ல வீதியில் உள்ள தன்சலேவத்த பிரதேசத்தில் இன்று (08) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் சிறு குழந்தை உட்பட மேலும் சிலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் 47 வயதான சந்தன பெரேரா, 42 வயதான மானெல் பெரேரா ஆகியோர் மரணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்யாலை திசையிலிருந்து கிரிஉல்ல திசை நோக்கி பயணித்த கண்டைனர் லொறி, எதிரே வந்த வேன் மற்றும் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

கண்டேனர் வாகனம் நேருக்கு நேராக வேனுடன் மோதியதால் வேனின் ஜன்னல், கதவுகள் கழன்று வீசப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த சிறு குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்த நபர் அருகிலுள்ள கடை ஒன்றுக்கு சென்றுள்ளார்.

கண்டைனர் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.