அரசாங்கத்திற்கு எல்லையற்ற அதிகாரத்தை வழங்கியதன் எதிர் விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு எமது நாட்டு அப்பாவி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதன் அழுத்தத்தை ஒட்டு மொத்த நாட்டு மக்களும் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார். 

மக்களின் இதயத்துடிப்பை புரிந்துகொள்ளாத மக்கள் படுகின்ற எல்லையற்ற துன்பங்களை கண்டு திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்ற ஒரு அரசாங்கமே இன்று நாட்டில் இருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மக்களின் தேவையையும் கவலையையும் புரிந்துகொள்வதற்கு பதிலாக அரசாங்கம் தூதுவராலங்களுக்கு முன் மண்டியிட வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் தன்னிச்சையான வேலைத்திட்டத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின்  மினுவாங்கொடை அமைப்பாளர் சமிந்த டி சில்வாவின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (11) மினுவாங்கொடை நகர மத்தியில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் ரணதுங்கவும் இதன் போது

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.  

இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா உட்பட மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜோர்ஜ் பெரேரா, ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் தனவர்தன குருகே உட்பட பொதுமக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.வலையொளி இணைப்பு-

https://youtu.be/Cj-GaloLZ4Y

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.