நேற்றைய தினம் (31) கம்பஹா மாவட்டம், பஸ்யாலை பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல்ல பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கைதான அரச புலனாய்வு பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள், அப்பெண்ணை பாழடைந்த இடத்திற்கு அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்றுள்ளார். அதனை தொடர்ந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நிட்டம்புவ பொலிஸார் குறித்த கான்ஸ்டபிளை கைது செய்துள்ளனர். (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.