நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்ததைப் போலவே, புதிய வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நன்மைகள் வழங்கப்பட மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு நேற்று (04) கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டார்.
“ஒவ்வொரு வருடமும் மக்களுக்கு நன்மைகள் உண்டு. ஆனால் 2022ல் இது சாத்தியமில்லை. வழமையான செலவுகள் தொடரும், மேலும் எங்களால் கூடுதலானவற்றை ஒதுக்க முடியும், ஆனால் மக்களுக்கு நன்மைகள் மற்றும் மானியங்களைப் பொறுத்தவரை, அது சாத்தியமில்லை, ”என்று அமுனுகம உறுதிப்படுத்தினார்.
புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது, ஒருவருக்கு சம்பளம் அதிகரிப்பது போல், மக்கள் எப்போதும் ஒரு "பரிசை" எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அதை எப்போதும் வழங்க முடியாது என்று அவர் மேலும் கூறினார்.
Tamilmirror