அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை மீனவர்கள் நால்வரும் நாட்டிற்கு வந்து சேர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் நேற்று கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், இயந்திரக் கோளாறு காரணமாக திசைமாறிச் சென்ற நிலையில் சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் இந்தியக் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.