அவிசாவளை, நாபாவளை இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் "மாபெரும் இரத்த தான முகாம் - மஹரகமை புற்றுநோய் வைத்தியசாலைக்காக" நாளை (20) சனிக்கிழமை நாபாவளை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
காலை 9.00 முதல் பி.ப. 3.00 மணிவரை நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் பெண்களுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர். (Siyane News)