“திருத்தப்பட்ட மோட்டார் போக்குவரத்துச் சட்டம்” எனக் குறிப்பிடப்பட்ட போலி ஆவணம் ஒன்று, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “மோட்டார் போக்குவரத்து அபராதம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் ஆவணம் முற்றிலும் பொய்யானது.

“குறித்த மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போக்குவரத்து விதி மீறல்கள் மற்றும் அபராதங்கள், தற்போதுள்ள சட்டங்களின்படி தவறானவை” என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இது போன்ற பொய்யான செய்திகளைப் பகிர வேண்டாமெனவும் பொதுமக்களை பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். 

தமிழ் மிரர் கருத்துரையிடுக

Blogger இயக்குவது.