( ஐ. ஏ. காதிர் கான் )

   நாட்டில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதின் காரணமாக, பாரிய நெருக்கடியைச் சந்திக்க நேரிட்டுள்ளதாக, கொழும்பு புறகோட்டை உணவகங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

   இந்த நிலைமை காரணமாக, கடைகளை மூட வேண்டிய நிலை நேரிட்டுள்ளதாக உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

   புறக்கோட்டையில் உள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் தேனீர்க் கடைகள் திடீரென மூடப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

   இதேவேளை, கொரோனா தொற்றுப் பரவலுக்குப் பின்னர் கடந்த வாரம் திறக்கப்பட்ட உணவகங்கள், தற்போது மீண்டும் மூடப்பட்டு வருவதாக,  ஐக்கிய நாடுகளின் சுய தொழில் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் கிரிஷான் மாரபே சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.