கடந்த 3 ஆம் திகதி மாவனெல்ல, மெடிரிகம வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை அத்துமீறி நுழைந்து அச்சுறுத்திய மாவனெல்ல பிரதேச சபையின் உப தவிசாளர் கே.ஜீ.பியதிஸ்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் அன்றைய தினம் பாடசாலைக்குள் நுழைந்த மேலும் இரு பிரதேச சபை உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவத்தில் பெற்றோர் ஒருவரை உப தவிசாளர் தாக்கியதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (Siyane News) 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.