கேகாலை மாவட்டம், தெஹியோவிட்ட பிரதேச சபைக்கு உட்பட்ட நாப்பாவளை கிராமத்திலே இன்றைய தினம் ஊர் வாலிபர்கள் இணைந்து மஹரகமை புற்றுநோய் வைத்தியசாலைக்காக இரத்ததான நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். 

சர்வமத வழிபாடுகளுடன் காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு மாலை 3 மணி வரை நடைபெற்றதுடன் இந்நிகழ்வுக்கு இன மத பேதமின்றி சிங்கள முஸ்லிம் சகலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த இரத்ததான நிகழ்வானது அடுத்த ஆண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ள நாப்பாவளை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதான கேட்போர் கூடத்திலேயே நடைபெற்றது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.