கரீம் ஏ. மிஸ்காத்தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக பாடசாலை மாணவர்களின் கற்றல் உபகரணங்கள் வெள்ளத்தினால் மூழ்கி பழுதடைந்திருந்தால் அதுதொடர்பில் உரிய மாணவர்கள் தமது பெயர்களை தங்களது கிராம உத்தியோகத்தரிடம் பதிவு செய்து கொள்ளுமாறு புத்தளம் பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

 தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் மாவட்டம் என்றுமில்லாதவாறு வெள்ளத்தினால் மூழ்கியது.

இந்த நிலையில், பாடசாலை மாணவர்களின் பாதணிகள், ஆடைகள் மற்றும் புத்தகப்பை அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் என்பன வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தால் அல்லது நீரில் மூழ்கி பழுதடைந்திருந்தால் அம்மாணவர்கள் தமது பெயர் விபரங்களை இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தாங்கள் வசிக்கும் கிராம உத்தியோகத்தர்களிடம் தெரியப்படுத்துமாறும் புத்தளம் பிரதேச செயலகம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.