"சுபீட்சத்தின் வீட்டுத்தோட்ட வாரம்" மீரிகமை தேர்தல் தொகுதியிலும் ஆரம்பம்!

Rihmy Hakeem
By -
0

 


(ரிஹ்மி ஹக்கீம்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தின் கீழ் "நஞ்சு, விஷங்கள் அற்ற இலங்கையை கட்டியெழுப்புவோம்" என்ற வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.

அதன் ஓர் அங்கமான "சுபீட்சத்தின் வீட்டுத்தோட்ட வாரம்" தேசிய வேலைத்திட்டம் ஒரே நேரத்தில் மீரிகம தேர்தல் தொகுதியிலும் ஆரம்பிக்கப்பட்டது. 

இதன்போது போதலே, மெதகம விவசாய காரியாலயத்தில் விதைகள் மற்றும் தென்னை நாற்றுக்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன, விவசாய சேவைகள் மத்திய நிலைய அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரி, பிரதேச சபை உறுப்பினர் லைலா லியனகே உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)