கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் புதிய உறுப்பினர்களாக பேராதனை பல்கலைக்கழக மெய்யியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர் உட்பட மேலும் இருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறுபான்மையினத்தவர்கள் அதிகமாக வாழும் கிழக்கு மாகாண தொல்பொருள் சம்பந்தப்பட்ட குறித்த செயலணியில், ஆரம்பத்தில் சிறுபான்மை இனத்தவர்கள் எவரும் உள்ளடக்கப்படாமை பல்வேறு தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிறுபான்மையினர் சார்பில் சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர் மற்றும் ஓய்வு பெற்ற மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் ஆகியோருடன் நில அளவையாளர் நாயகம் ஆரியரத்ன திசாநாயக்க ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.