தென்னிந்திய முஸ்லிம் ஆன்மீகத் தலைவர்  ஆன்மீகத் தலைவர் அஷ்-ஷெய்க் அப்ழலுல் உலமா தைக்கா அஹ்மத் நாஸிர் ஆலிம்  அவர்கள் நேற்று (22) முற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார்.

அவர் காலஞ்சென்ற இந்திய முஸ்லிம் ஆன்மீகத் தலைவரான அஷ் ஷெயிக் கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் அவர்களின் புதல்வராவார்.

hl 6250831065மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய பணிகள் குறித்து இச்சந்திப்பின் போது கலாநிதி அஹமத் நஸீர் ஆலிம் அவர்கள் கௌரவ பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

தைக்கா அஹமத்  நாஸிர் ஆலிம் அவர்கள், இந்நாட்டின் மஹாசங்கத்தினர் மற்றும் இஸ்லாம் மத தலைவர்கள் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

hl 6250831062

குறித்த சந்திப்பின் போது கலாநிதி அக்ரஹெர கஸ்ஸப தேரர் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

தைக்கா அஹமத்  நாஸிர் ஆலிம் அவர்களுடன் வருகைத்தந்திருந்த முஸ்லிம் மதத் தலைவர்களும் கௌரவ பிரதமருடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.