(ரிஹ்மி ஹக்கீம்)

பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சினால் கம்பஹா மாவட்டம், தொம்பே தேர்தல் தொகுதியிலுள்ள வானலுவாவ பிரதேசத்தில் பத்திக் பயிற்சி நிலையம் ஒன்று நேற்றைய தினம் (09) திறந்து வைக்கப்பட்டது.

குறித்த வேலைத்திட்டமானது தொம்பே பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஜயதிஸ்ஸவின் பூரண மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இப்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற பிரதேசத்தை சேர்ந்த 25 பெண்கள்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக, தொம்பே பிரதேச சபை தவிசாளர் பியசேன காரியப்பெரும உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் தொம்பே பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.