அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு வழங்குமாறு கோரி இன்று (03) மாவனெல்ல, மெடேரிகம பாடசாலையில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரை எதிர்த்ததுடன் தந்தை ஒருவரை தாக்கிய மாவனெல்ல பிரதேச சபையின் உப தவிசாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு ஆசிரியர் சங்கங்கள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

மேற்படி ஆர்ப்பாட்டமானது நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்றதுடன், குறித்த பாடசாலையில் மாவனெல்ல உப தவிசாளர் அத்துமீறி நுழைந்துள்ளதுடன் காரியாலயத்திலும் நுழைந்து ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

முன்னைய செய்தி - http://www.siyanenews.com/2021/11/blog-post_93.html?m=1
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.