கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவை திணைக்களத்திற்கு கிடைத்த, மாடி கட்டிடங்களில் பரவக்கூடிய தீயினை அணைப்பதற்காக பயன்படுத்தப்படும் 15 தீயணைப்பு வாகனங்களில் சிலவற்றை அமைச்சர்கள் சிலர் தம்முடைய பிரதேசங்களுக்கு கொண்டு செல்வதற்கு முயற்சித்துக்கொண்டிருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவை பிரிவுக்காக 10 மில்லியன் யூரோ செலவில் குறித்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், பொது சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் முறைப்பாடு செய்துள்ளார்.