அனஸ் அப்பாஸ்

சர்வதேச விருது! அல்ஹம்துலில்லாஹ்!

அமைதியாக நகர்ந்த இலங்கை திருநாட்டை அல்லோலகல்லோலப்படுத்தியது அந்த ஈஸ்டர் தாக்குதல் 2019! தாக்குதல் இடம்பெற்ற அதிர்ச்சி என்னைவிட்டும் நகர முன்னரே அலுவலக நண்பர் நிமேஷிடம் இருந்து ஒரு அவசர அழைப்பு!

"முழு நாட்டிலும் இனவாதம் தீப்பற்றி எரியப்போகின்றது. இது சமூக ஊடகங்கள் வாயிலாகத்தான் விரைவாக முழு நாட்டையும் பொசுக்கப் பார்க்கின்றது. இதனை (Constructed & Non-Constructed) தடுக்க விரைவாக நாம் செயற்பட வேண்டி இருக்கின்றது. ஒரு குழுவாக வெறுப்புப்பேச்சுக்களை கட்டுப்படுத்தவும், போலி செய்திகளை அடையாளம் கண்டு உண்மை நிலவரத்தை சமூக மயப்படுத்தவும் ஒரு பொறிமுறை அவசியம். இதற்கு இங்கிலாந்தை தலைமையகமாகக் கொண்ட Search for Common Ground இன் இலங்கைக் கிளை எமக்கு உதவத் தயார்" என்றும் கூறினார். விசேட அம்சம் என்னவெனில் எனக்கு நன்கு பரீட்சயமான Mr. Mohammed Nawaz  அவர்கள்தான் இந்த அமைப்பின் இலங்கைக்கான தலைமை அதிகாரி. இதுவே கூடுதல் நம்பிக்கையைத் தந்தது.

Cyber Guardians | National Champions

ஆம். "National Champions" இப்படித்தான் எமது குழுவுக்கு பெயர் சூட்டப்பட்டது. துரித கதியில் 24 மணித்தியாலமும் எம்மால் குழுவாக இயங்க முடிந்தது. எந்த ஒரு இனவாத கருத்து, போலி செய்தி முகநூலில் இடம்பெற்றாலும் துரித கதியில் அதன் பின்னணி, நோக்க ஆராய்வு, உறுதிப்படுத்தல், விழிப்புணர்வுத் திட்டம் (Hate Speech & Fake News Background & Goal Check, Fact Checking & Confirmation, Awareness Campaign) இதுதான் சுருக்கமான விளக்கம். மோதல், வன்முறை வருமுன் காப்புத் திட்டம்! இதில் இணைந்து பணியாற்றிய பலர் இதுவரை கண்டிராத முகங்கள். என்றாலும் இவர்கள் பின்னணியில் இருந்து செயற்படும் பல Cyber Guarding & Influencing Activities நாடளாவிய ரீதியில் அழுத்தங்களை ஏற்கனவே மேற்கொண்டிருந்தன.

இதோ அந்த Soldiers பெயர் பட்டியல்!

Chamal Akalanka Polwaththage 

Nisal Wickramasinghe 

Sujith Annamaley 

Chamara Sumanapala 

Nishantha Anthony 

Tharindu D Perera

Dasuni Jayasinghe 

Nadee Manikkage 

Nuwan Prasad 

Pasindu Vidarshana 

Arzath Areeff 

Mihindu Fonseka 

Hamza Haniffa 

Pubudu Lakmal 

Jeevithan JeevClix 


Special Thanks to Marisa Fernando, Malshani Delgahapitiya, Armerasekara Rajitha, Deepamala Jegajeevanraj, Kiru Kiruthi & Search for Common Ground Sri Lanka Team!

இக் காலப்பகுதியில் இணையக் காப்பு, மற்றும் இளைஞர், யுவதிகள் வலுவூட்டல் என நாடுபூராகவும் பயணிக்க சந்தர்ப்பங்கள் கிடைத்தன. சிங்கள மொழியில் Nimesh Rawanage உம், தமிழில் நானும் இந்த வலுவூட்டல் செயலமர்வுகளை மேற்கொண்டோம். அரச அலுவல் அக்காலப்பகுதியில் எனக்கும் நிமேஷிற்கும் ஒரு இயந்திர வாழ்க்கையையே தந்தது. இரவு முழுவதும் ஜனாதிபதிக்கான ஊடக பகுப்பாய்வு அறிக்கையிடல் பணி. அதிகாலை நாடு சுற்றும் பயணம். இப்பயணத்தில் 600 இற்கும் மேற்பட்ட இளம் இணையக் காப்பாளர்களை (Cyber Guardians) உருவாக்க எம்மால் முடிந்தது. இவ் வலையமைப்பின் உதவியுடன் 6 மில்லியன் சமூக ஊடக பாவனையாளர்களை எமது முயற்சிகள் சென்றடைந்திருக்கின்றன என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி. இம் முயற்சி மீம்ஸ், வீடியோ பதிவுகள் மற்றும் தேசிய ரீதியான வீடியோ உருவாக்க போட்டி, பத்திரிகை விளம்பரங்கள் என பல வடிவங்களில் சமூகமயமாகின.

வேகமாகவும், விவேகமாகவும் செயற்பட்ட இக் குழு முயற்சி வீண் போகவில்லை என்பதற்கு சாட்சியாக எமது பெயர் இன்று சர்வதேச அரங்கில் உச்சரிக்கப்படுகின்றது..

இது விருதுக்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பு அல்ல என்றாலும் விருது தரும் அங்கீகாரம் என்பது திருப்தியையும், மன நிறைவையும் தருகின்றது.

மோதல் தீர்வு, பேச்சுவார்த்தை, சமூகத்தை கட்டியெழுப்புதல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் சிறந்த சாதனைகளை கௌரவிக்கும் வகையில் Common Ground Awards ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது. கடந்த வருடம் இவ்விருது இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கு கிடைத்தது. அதற்கு முன்பு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், உலக குத்துச் சண்டை பிரபலம் முஹம்மத் அலி என பலர் இவ்விருதை வென்றுள்ளனர். இவ்வருடம் எமது Cyber Guardians வென்றது. இவ் விருது (இலங்கை நேரப்படி) நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் Glasshouse Chelsea யில் விருது விழா ஆரம்பித்ததும் அறிவிக்கப்படப் போகின்றது. எமது சார்பாக, National Champions இற்கு தலைமை தாங்கிய Nimesh இங்கிலாந்திலிருந்து இதில் Virtual வடிவில் சிறப்புரையாற்றுகின்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.