பியகமை பிரதேச சபையில் நான்கு தடவைகள் உறுப்பினராக இருந்த சகோதரர் ஹசன், அண்மையில் சுகயீனமுற்றிருந்த நிலையில் காலமானார். இந்நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினரான அவரது வெற்றிடத்திற்கு கடந்த தேர்தலில் அவருக்கு அடுத்த படியாக அதிகூடிய வாக்குகளை பெற்ற சகோதரர் இர்ஷாட் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

காலம் சென்ற சகோதரர் ஹசன் அவர்கள் மள்வானையில் மாத்திரமன்றி, பியகமை தொகுதியில் மாத்திரமன்றி முழு கம்பஹா மாவட்டத்திலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை வெற்றி பெற செய்வதற்காக உழைத்த ஒரு போராளி என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)


வெற்றிடமாக உள்ள பியகம பிரதேச சபையின் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராக சகோதரர் இர்ஷாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Posted by SLMC Youth Congress - Gampaha District on Wednesday, November 10, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.