Smoot.lk பற்றிய ஒரு விளக்கம்.

 Smoot.lk என்பது 100 % இலங்கையை அடிப்படையாகக் கொண்ட ஒன்லைன்

சந்தையாகும், இதில்  மக்கள் கொள்வனவு மற்றும் விற்பனை செய்வதற்கும், வாடகைக்கு வழங்க முடியுமான அதேவேளை  ஏதாவது ஒன்றை இலவசமாக கொடுக்கவும் முடியும் என்பது இந்த ஒன்லைன் சந்தையின் விசேட அம்சமாகும்.

Smoot.lk   என்பது 2020 ம் ஆண்டில் நிறுவப்பட்ட தாய் நிறுவனமான Smoot டெக்னொலொஜீஸ் தனியார் நிறுவனத்துடன் இணைந்த நிறுவனம் ஆகும். பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுனர்களின் குழு உள்ளடங்கிய  நாங்கள் அதன் அனுவபத்துடன்  சிறந்த ஒன்லைன் சந்தையாகிய  Smoot.lk   யை கட்டியெழுப்பி உள்ளோம்.


Smoot.lk  இன் குறிக்கோள் 

இலங்கை ஒன்லைன் சந்தைகள் மற்றும் சமூகத்தில் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதாகும். உலகெங்கிலும் உள்ள எவரும் வலைத்தளத்தை அணுகலாம் மற்றும் உலாவலாம் .

 Smoot.lk  இல் பதிவு செய்வதற்காக, உங்களின்  இலங்கைக் கையடக்கத் தொலைபேசி  எண்  மட்டுமே தேவை.

Smoot.lk  இல் இருக்கும் பல மேம்பட்ட அம்சங்களை தற்போதுள்ள மற்ற வலைத்தளங்களுடன் ஒப்பிடும் போது அதன் சிறப்பம்சம் மற்றும் முக்கிய வேறுபாடு என்னவென்றால், தேவைப்படுபவர்களுக்கும், இலவசமாக பொருட்களை வழங்குபவர்களுக்கும் ஒரு தளத்தை நிறுவி உள்ளோம்  என்பதை நாங்கள்  உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.


இந்த புரட்சிகர முறையில்,

 தேவைப்படும் எவரும் தனக்குத் தேவையானதை கௌரவத்துடனும், கண்ணியத்துடனும் Smoot.lk  இல் உள்ள  GIVE  ஸ்ரீ லங்கா  என்ற முறையில்   பெற்றுக் கொள்ளலாம். நாளைய ஒரு சிறப்பான இலங்கைக்காக இன்று GIVE SRI LANKA . 

எமது பார்வை  

ஒரு தொழிலதிபரின் அனைத்து சமூக, புவியியல், பொருளாதார மற்றும் பாலின தடைகளை உடைப்பது. உங்கள் நிலை, உங்கள் இருப்பிடம், உங்கள் பாலினம் மற்றும் உங்களை வரையறுக்கும் அனைத்தும் இனி உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்க வேண்டியதில்லை.

எங்கள் பணி

நாளைய உங்கள் பார்வை இன்று எங்கள் பணி. நாங்கள் உங்கள் இலக்குகளை நோக்கி வேலை செய்கிறோம். எங்கள் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தையும், தலத்தையும் முடிவில்லாத முன்னேற்றத்தையும் கொடுக்க நவீன தொழில்நுட்பங்களை நாங்கள் கொண்டு வருகிறோம்.

Smoot.lk , மற்றும் ஸ்மூட் டெக்னாலஜிஸ் எப்போதும் அனைத்து அம்சங்களிலும் எங்கள் பயனர்களுக்கு சிறந்ததை வழங்கவே செயற்படுகிறது.


Give  ஸ்ரீ லங்கா (Give Sri Lanka)

Smoot  என்பது மக்கள் வாங்கவும் விற்கவும் கூடிய மற்றொரு ஒன்லைன் சந்தை மாத்திரம் அல்ல. ஸ்மூட்டின் குறிக்கோள், சமூக அடிப்படையிலான ஒன்லைன் சந்தைகளில் அடையாளம் காணப்பட்ட வழக்கமான பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் கிவ் ஸ்ரீ லங்கா மூலம் நமது சமூகத்திற்கு பங்களிக்கச் சரியான தளத்தை வழங்குவதாகும். கிவ் ஸ்ரீ லங்கா என்ற கருத்து ஒவ்வொரு நபரின் நிதி நிலையையும் பொருட்படுத்தாமல் நமது சமூகத்திற்கு பங்களிக்கும் வாய்ப்புக்களை ஊக்குவிக்கவும் உருவாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


 தூய்மையான எண்ணத்தோடு இவற்றை வழங்குவதற்கான வாய்ப்புகளை நாங்கள் உருவாக்குகிறோம்.


வசதி படைத்தவர்களால் மாத்திரமே சமூகத்திற்குக் கொடுக்க முடியும் என்ற மூட என்னத்தை உடைப்பது  ஸ்மூட்டின் தேவையாகும். 

உதாரணமாக, நீங்கள் பணக்காரராக இல்லாமல் இருக்கலாம், ஆனால் உங்களுக்கு இனி தேவையில்லாத ஒன்று உங்களிடம் இருக்கலாம், நிச்சயமாக நம் சமுதாயத்தில் அதைத் தேவைப் படும், வாங்க முடியாதவர்கள் யாராவது இருக்கலாம், எனவே, சிறந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக கிவ் ஸ்ரீ லங்காவில் ஒரு செங்கல்லாக இருங்கள்.


யாருக்காவது ஏதாவது தேவைப்பட்டு அவருக்கு அதை வாங்க முடியாவிட்டால், அவருக்கு அதை நல்லெண்ணத்தோடு இலவசமாகப் பெற்றுக் கொடுப்பதற்கு / வாங்குவதற்கு கிவ் ஸ்ரீ லங்காவினால் முடியும். இன்று கிவ் ஸ்ரீ லங்காவினால் நீங்கள் ஏதாவது கொடுக்கலாம் மற்றும் உங்களுக்குத் தேவைப்படும்போது எதையாவது எடுத்துக் கொள்ளலாம். எனவே, கிவ் ஸ்ரீ லங்காவினால் கௌரவத்தொடு கொடுப்பதும், கௌரவத்தொடு எடுப்பதும் மேற்கொள்ளப்படும்.  


Give  ஸ்ரீ லங்காவினால் நான் பட்டியலிடக்கூடிய பொருட்கள் என்ன ?

அடிப்படையாக நீங்கள் எந்த பொருளையும் இலவசமாக வழங்க விரும்பினால்.

• புதிய பொருள் ஒன்று.

•  பாவிக்கப்பட்ட பொருள் ஒன்று..

•  பழுது பார்க்க வேண்டிய பொருள்.

•  பொருளின் பகுதி.

•  புதிய /  உபயோகித்த பயன்பாட்டு உபகரணங்கள் ( சக்கர நாற்காலி / கைத்தடி / நீர் மெத்தை / மூக்குக் கண்ணாடி போன்றவை )   

•  தொண்டுப் பொருட்கள்

* அகற்ற நினைக்கும் ஏதாவதொரு பொருள் 

•  காணாமல் போன கண்டுபிடிக்கப்பட்ட பொருள்

காணாமல் போன கண்டுபிடிக்கப்பட்ட பொருள் என்றால் என்ன ? 

மக்கள் இழந்ததைக் கண்டறிய உதவுவது கிவ் ஸ்ரீ லங்காவின் ஒரு செயற்பாடாகும். நீங்கள் எதையாவது கண்டுபிடித்து, உரிமையாளரை உங்களுக்குத் தெரியாவிட்டால் இந்தப் பிரிவில் பட்டியலிடலாம், இதனால் உரிமையாளர் பட்டியலைப் பார்த்து உங்களிடம் உரிமை கோரலாம். எனவே, மக்கள் இங்கே தேடி, அவர்கள் இழந்ததைக் கண்டுபிடிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் ஒரு மனிதனாக மற்ற சக மனிதன் இழந்ததைக் கண்டுபிடிக்க உதவுவது நமது கடமையாகும்.


Give  ஸ்ரீ லங்காவின்ன் நோக்கம்.

உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களின் தரவுகளுக்கமைய, தேவைப்படுபவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மேலதிகப்படியான பொருட்களைக் கொட்தப்படும் என்பதைக் காட்டுகின்றது. நீங்கள் எதையாவது தூக்கி எறிவதற்கு முன் சிந்தியுங்கள், ஏனென்றால் அதைத் தேவையாகக் கருதும் ஒருவர் இருக்கலாம். உங்களுக்கு இனி தேவையில்லாத ஒன்று உங்களிடம் இருந்தால், இன்று தேவைப்படுபவருக்கு ஏன் கொடுக்கக்கூடாது, அது இன்னும் நல்ல நிலையில் இருக்கும்போது, ​​அது பயன்படுத்த முடியாததாக இருக்கும் வரையிருக்க வேண்டாம். ஒரு மனிதனின் குப்பை மற்றொரு மனிதனின் புதையல்.

எனவே, சிறந்த நாளைய இலங்கையை உருவாக்குவதற்காக ஒருவருக்கொருவர் உதவுவோம்.  

நீங்களும் இணைந்துகொள்ள... >   https://smoot.lk/

Smoot.lk பற்றிய வீடியோ  விளக்கம் 

நன்றி : Madawala News


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.