எமது சியன ஊடக வட்டத்தினால் அச்சிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான கலண்டர்களின் முதற்பிரதிகள் இன்று (19) முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிலில் வைத்து வழங்கப்பட்டது.

 அங்கு நடைபெற்ற இலவச கத்னா நிகழ்வின் போது முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் மற்றும் சியன ஊடக வட்டத்தின் தலைவர் அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வரினால் குறித்த கலண்டர்களின் முதற்பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலின் நிர்வாக சபை தலைவர் அல்ஹாஜ் அதாவுல்லாஹ், சமூக சேவகர் அல்ஹாஜ் அன்ஸார், முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிலின் பொருளாளர் அல்ஹாஜ் பயாஸ், அல்ஹாஜ் ரியாஸ் ஆகியோர் முதற்பிரதிகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

2022ம் ஆண்டுக்கான சியன ஊடக வட்டத்தின் கலண்டர்களை பெற்றுக் கொள்ள 0757823204 எனும் வட்ஸ்அப் இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளவும்.

(Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.