(ரிஹ்மி ஹக்கீம்)

100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் ரதாவான, துங்மங் சந்தி பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவாவின் தலைமையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த வேலைத்திட்டத்திற்கு ரூபா 20 மில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

மஹகம சேகர என்ற கலைஞர் காரணமாக ரதாவான, துங்மங் சந்தி (துங்மங் ஹந்திய) மிகவும் பிரபலமடைந்தது. அவரது நினைவுபடுத்தலுடன் பிரதேசத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆரம்ப நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதில உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். (Siyane News)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.