இலங்கையர்களுக்கு ருமேனியாவில் பணிபுரிவதற்கு ஒரு வருடம் மாத்திரமே ஒப்பந்தம் செய்ய முடியும் என்பதனால் அதனை இரு வருடங்கள் வரை நீடிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன தெரிவித்தார்.

ருமேனியா நாட்டில் பணிபுரிவதற்காக செல்லும் இலங்கையர்களுக்கு டிக்கட் வழங்கி வைக்கும் நிகழ்வொன்றில் அவர் இதனை இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போதும் அதனை இரு வருடங்களாக நீடிப்பதற்கு சந்தர்ப்பம் இருந்தாலும் அவ்வாறு நடைபெறுவது தொழிலாளியின் நடத்தை மற்றும் வேலை செய்யும் திறன் அடிப்படையிலாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

ருமேனியாவில் பணிபுரிவதற்காக செல்வதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பதிவு மற்றும் நிர்வாக கட்டணங்கள், வீசா மற்றும் டிக்கட் கட்டணங்கள் என்பவற்றையே அறவிடுவதாகவும் தெரிவித்த அவர் பணியகத்தினால் அதற்காக பாரிய தொகை பணம் அறவிடப்படுவதாக வெளியாகும் தகவல்கள் பொய்யாகும் என்றும் தெரிவித்தார். (Siyane News)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.