நிட்டம்புவ, மல்வத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கேஸ் அடுப்பு வெடித்ததில் சிறியளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலுள்ள பெண் ஒருவர் நேற்று (30) மாலை கேஸ் அடுப்பினை பற்ற வைத்து விட்டு விலகி சென்ற பின்னர் குறித்த அடுப்பு வெடித்துள்ளதாகவும், அப்பெண் அதே இடத்தில் இருந்தால் அல்லது கேஸ் கொள்கலனும் வெடித்திருந்தால் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக சில்வா மற்றும் அத்தனகல்ல உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி நிட்டம்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அபேரத்ன உள்ளிட்ட அதன் ஏனைய பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (Siyane News)