வாழ்த்துக்கள் CONGRATULATIONS !
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ஆசிரியர் அப்துல் அஸீஸ் முகம்மது அர்சாத் மற்றும் பலஹத்துறை அல்-பலாஹ் கல்லூரி ஆசிரியை சாபிக் பர்சானா ஆகியோரின் மகனான செல்வன் முகம்மது அர்சாத் ஆரிஸ் அஹமடின் பெயர் ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இவர் ஆறு வகையான சாதனைகளை ஆசிய சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
அவற்றில் 5 கணிதத்துடன் தொடர்பானவையும், ஒன்று இனங்காணல் தொடர்பானதும் ஆகும்.
இவர் பதிவு செய்த சாதனைகள் வருமாறு,👇👇👇👇👇👇👇👇👇
🛑1 தொடக்கம் 30 வரையான சதுர எண்களை விரைவாக கூறுதல் (34 செக்)
🛑முதல் 30 நிறைவர்க்க எண்களின் வர்க்கமூலங்களை எழுமாற்றாக தீர்த்தல்
🛑1 தொடக்கம் 11 வரையான பெருக்கல் வாய்ப்பாடுகளை மிக விரைவாக கூறுதல் (98 செக்)
🛑1 தொடக்கம் 100 வரையான எண்ணும் எண்கள் மற்றும் இரட்டை எண்களைக் கூறுதல்
🛑90 வகையான விலங்குகளை அடையாளம் காணுதல்.
இவர் இச்சாதனையைப் புரியும் போது #அவரது_4_வயது_11_மாதங்களே_ஆகும்.
அத்துடன் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறாத மேலதிக கணிதத் திறமைகளையும் இவர் கொண்டுள்ளார்.
இவரது பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் ஆவர்.
செல்வன் முகம்மது அர்சாத் ஆரிஸ் அஹமட்டிற்கான சான்றிதழும் விருதும்
கூரியர் சேவை மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சாதனை மாணவன் மற்றும் அவரது குடும்பம் நீர்கொழும்பு, பலஹத்துறையில் வசித்து வருகின்றனர்.
வாழ்த்துக்கள் ஆரிஸ் அஹமட் <3
https://www.facebook.com/356422744481171/posts/4544210232369047/
தகவல்: ரிஸ்மி
நன்றி : முன்னோடி