ரஷ்யா மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்றுகூடலில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ரஷ்யா பல்கலைக்கழகத்தினால் (Udmurt State University of Russia ) ஏற்பாடு செய்யப்பட்ட  மாதிரி  Izhevsk Federal Model United Nations அமைப்பின் நிகழ்வொன்று 31.11.2021 திகதியில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்களாக இடம்பெற்றது.

இந்நிகழ்வானது நேரடியாகவும் மற்றும் zoom தொழில்நுட்பத்தின் ஊடாகவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தககது.

இந்நிகழ்வில் இலங்கையை பிரநிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசிய இளைஞர் பாராளுமன்ற பிரதமர் Pathum Ranasinghe மற்றும் இளைஞர்கள் பாராளுமன்ற  வெளிவிவகாரம் மற்றும் இராஜதந்திர உறவுகளின் பிரதியமைச்சர் Ahmath Sadique அவர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் "கொவிட் 19 நோய்த்தொற்றும்  மனித உரிமைகளும் " அதாவது கொவிட் 19 பரவல் காலப்பகுதியில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டது. மேலும் கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் பயன்படுத்திய உத்திகள் தொடர்பாகவும் அவதானிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.