பலஸ்தீன் என்ற பெயரைக் கேட்டவுடன் எமது நினைவுக்கு வருவது பலஸ்தீன்-இஸ்ரவேல் மோதல் அல்லது காஸா தீரத்தின் யுத்தம். பல தசாப்தங்களாக தீர்வின்றி நீண்டுசெல்லும் இந்த மனித படுகொலைகளினால் பலஸ்தீனர்கள் தமது தாய் நாட்டிலேயே அகதிகளாகி உள்ளனர். அவ்வப்போது மூளும் போர்ச் சுவாலைகள் சாம்பலில் புதைந்திருக்கும் நெருப்பைப் போல் முடிவில்லாத பேரழிவாகியுள்ளது. குறிப்பாக கடந்த மே மாதம் 10 ஆம் திகதி ஆரம்பித்து 11 நாட்களாக காஸாவில் நடைபெற்ற யுத்தமானது சர்வதேசிய ஊடகங்களிலும் இலங்கையிலும் தொலைகாட்சி அச்சு ஊடகங்களிலும் விசேட கவனத்தைப் பெற்றது. அவ்வாறான ஊடக அறிக்கைகளிலும் அதிகம் புகழ்ந்துரைத்துக் காட்டப்படது இஸ்ரவேலின் யுத்த பலம் அல்லது தொழிநுட்பம் பற்றியதாகும். 

ஆனால், பலஸ்தீன் குடியிருப்புக்களில் இடம்பெற்ற அப்பாவி மனிதர்கள் - பெண்கள் - பிள்ளைகளின் படுகொலைகள் குறித்தோ, சொத்து உடமைகள் அழிந்தது குறித்தோ, அவர்களின் வாழ்க்கை முகங்கொடுக்கும் பெருந்துயரம் குறித்தோ அதிகமானவர்கள் பேசவில்லை. மே மாதத்தில் மட்டும் பலஸ்தீனர்கள் 269 பேர் கொல்லப்பட்டதோடு, அதில் 75 பேர் ஆறு மாதத்துக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களாவர். பெண்கள் 38  பேர் கொல்லப்பட்டதுடன் அவர்களில் நான்கு பேர் கர்ப்பிணிகளாவர். உடல் ஊனமுற்ற ஒரு சிறுவன் உட்பட கொலைசெய்யப்பட்ட ஊனமுற்றோர் எண்ணிக்கை மூன்று ஆகும். மேலும் 2,300 பேர் காயப்பட்டிருப்பதுடன் அதில் 610 பேர் சிறுவர்களாவர். இது எவ்வளவு கொடிய அழிவு?

அதுமட்டுமல்ல, பலஸ்தீனர்களின் வீடுகள் பலவந்தமாகக் கைப்பற்றுதல் நீண்ட காலமாக நடைபெறுகின்றது. இராணுவத் தடைகளுக்கு மத்தியில் அவர்களின் சட்டங்களுக்கு அடிபனிந்து வாழவேண்டியுள்ளது. அத்தியாவசிய உணவு, மருந்து போன்ற மனிதாபிமான உதவிகளுக்குக் கூட பாரிய தடைகள் போடப்பட்டுள்ளன. பலஸ்தீன் மக்களின் சுதந்திரமான சுயாட்சி உரிமை மட்டுமல்ல அடிப்படை மனித உரிமைகளைக் கூட இல்லாமலாக்கிக்கொண்டு மேற்கொள்ளப்படும் இஸ்ரவேல், அமெரிக்கா உட்பட ஏகாதிபத்தியவாதச் செயல்பாடுகள் சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச கருத்துக்களைக் கூட ஒரு சதத்துக்கும் பொறுட்படுத்தாமல் மேற்கொள்ளப்படுகின்றன. இடைவிடாமல் தொடுக்கப்படும் இந்த மிலேச்சத்தனத்துக்கு, மிலேச்சத்தனமான தாக்குதலுக்கும் அநியாயங்களுக்கும் எதிராக பலஸ்தீன மக்கள் நீண்ட காலமாக தமது நாட்டை விடுவிக்கும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கிழக்கு ஜெரூசலம் மக்கள் நீண்ட காலமாக தமது நாட்டை விடுவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராகக் கொண்ட சுதந்திரமான இறையாண்மையுள்ள பலஸ்தீன் தேசத்தை அமைப்பதற்கு பலஸ்தீன் மக்களும் உலகம் முழுதும் அதற்கு ஆதரவளிக்கும் மக்களும் தமது நியாயமான போராட்டத்தை இஸ்ரவேல் மற்றும் ஏகாதிபத்தியவாதிகளின் இந்த மனிதத் தன்மையற்ற தாக்குதல்களினாலும் ஆக்கிரமிப்புக்களினாலும் கைவிட மாட்டார்கள்.

பலஸ்தீன் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மனிதத் தன்மையற்ற சித்திர வதைகளுக்கு எதிராக அனைத்து அமைப்புக்களும் குழுக்களும் வருடாந்தம் நவம்பர் 29 ஆம் திகதி சர்வதேச பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினத்தை அனுஷ்டிக்கின்றது. பலஸ்தீன் போராட்டமானது முழு உலகின் சோஷலிச - முற்போக்கு - ஜனநாயகத்தை மதிக்கின்ற நாடுகள் அமைப்புக்கள் மனிதர்கள் அனைவருடைய ஒத்துழைப்பைப் பெறும் போராட்டமாகியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் என்ன முயற்சியை செய்தாலும் அம்முயற்சிகளைத் தோல்வியடைச்செய்து பலஸ்தீனுக்கு யுனெஸ்கோ அமைப்பின் பூரண உறுப்புரிமையைப் பெற்றுக்கொடுக்க முடியுமாகியதும் அச்சர்வதேச ஒருமைப்பாட்டின் பெறுபேறாகும்.

சர்வதேச பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினத்துடன் இணைந்ததாக “பலஸ்தீனத்தை வாழ இடம்கொடு!” என்ற தொனிப்பொருளில் சுதந்திர பலஸ்தீனத்துக்காக தேசிய ஒருமைப்பாட்டு வேலைத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு சோஷலிச இளைஞர் சங்கமாகிய நாம் 2010 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்துகின்றோம். இம்முறையும் சுதந்திர பலஸ்தீனத்துக்காகப் போராடும் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவலித்துத் தைரியமூட்டுவதற்காக 2021 நவம்பர் 26 முதல் 2021 டிசம்பர் 3 ஆம் திகதி வரை நடத்தப்படும் பலஸ்தீன் ஒருமைப்பாட்டு வேலைத்திட்டத்துக்காக கையேடு விநியோகம், அமைதி ஆர்ப்பாட்டம், ஆவணப்படங்ளைக் காட்சிப்படுத்துதல், வழிபாட்டுத் தளங்களுக்கு அருகில் எதிர்ப்புப் பதாகையில் கையொப்பமிடல், சர்வதேச கருத்தரங்குகள் என பல நடவடிக்கைகளை நடத்துவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளன.

உண்மையாகவே பலஸ்தீனுக்கு சுதந்திரத்தை வெற்றிபெறுவதென்பது ஏகாதிபத்தியவாதிகளுக்கும், அவர்களின் வேலைத்திட்டங்கள் மற்றும் தேவைகளை நிறைவேற்றும் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கும் எதிராக மேற்கொள்ளும் இடைவிடாத வீரியமான போராட்டத்தினால் மட்டுமே முடியும் என்றும், அந்த பலஸ்தீனத்தின் சுதந்திரத்திற்காக பலஸ்தீனிலும், இஸ்ரவேலிலும் உலகம் முழுதும் இயங்கும் சோஷலிச - முற்போக்கு - ஜனநாயக என அனைத்து மக்களை ஒன்றுதிரட்டிக்கொண்டு ஒன்றிணைந்த பாரிய மக்கள் இயக்கத்தினால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் நாம் நினைக்கின்றோம். எல்லா மக்களுக்கிடையிலும் எல்லா நாடுகளுக்கிடையிலும் ஒற்றுமையையும் சுதந்திரத்தையும் உறுதிபடுத்தக் கூடியது சோஷலிசத்தில் மட்டும் என நம்பும் நாங்கள் கிழக்கு ஜெருசலம் தலைநகராகக்கொண்ட சுதந்திரமான இறையாண்மையுள்ள பலஸ்தீனத்தை நிலைநிறுத்துவதற்கு உதவி வழங்குவது சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சகோதரத்துவத்தை நம்பும் நம் அனைவருடைய பொறுப்பு என்றும் நினைக்கின்றோம்.

அதுபோல், இலங்கையிலும் அவ்வப்போது தலை தூக்கும் பல்வேறு இனவாத மதவாத தீவிரவாதங்களுக்கும் பெயர்தாங்கி அரசியல் இயக்கங்களுக்கும் பலியாகாமல் ஒரே நாட்டில் ஒரே நாட்டவராக உலகத்தின் முன்னால் பலமாக எழுந்து நிற்பதற்கும், அப் பலத்தினால் பலஸ்தீன் போன்று அநியாயத்துக்கு ஆளாகும் அல்லது ஆளான எந்தவொரு நாட்டவருக்காயினும் ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஒன்றுபடுமாறும் நாம் உங்கள் அனைவரையும் அழைக்கின்றோம்.

உலக நாடுகள் 136 பலஸ்தீனத்தை அங்கீகரிக்கின்றது. சுதந்திரமான பலஸ்தீனத்துக்கு எதிரான ஆக்கிரமிப்பை உடன் சுருட்டிக்கொள். பலஸ்தீனத்தை வாழ இடம்கொடு!


தேசிய குழு 

சோஷலிச இளைஞர் சங்கம்




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.