களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வஸ்கடுவ பிரதேசத்திலுள்ள மர ஆலை ஒன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அதிகளவு பொருட்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

களுத்துறை வடக்கு பொலிஸார், களுத்துறை நகர சபையின் தீயணைப்பு வண்டிகள் இரண்டை பயன்படுத்தி பிரதேச மக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். 

கடினமாக்கப்பட்ட பலகைகள் மற்றும் பலகைகளை சேமித்து வைக்கும் பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், பாரியளவு பலகைகள் அழிவடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. (Siyane News)

படங்கள் - லங்காதீப

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.