அத்தனகல்ல தேர்தல் தொகுதியின் நான்காவது Co - op Fresh கூட்டுறவு விற்பனை நிலையம் அத்தனகல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் (26) கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர்  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கு அமைவாக தற்போதுள்ள கூட்டுறவு நிலையங்களை நவீனமயப்படுத்தி, தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் 5000 அளவிலான பிரதேச கூட்டுறவு வலையமைப்பொன்றை உருவாக்கும் திட்டத்தின் முன்னோடியாக அத்தனகல்ல தொகுதியில் Co - op Fresh கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூன்று அண்மையில் (11/07) திறந்து வைக்கப்பட்டது.

காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இந்த Co - op Fresh விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும் என்பதுடன் அவற்றில் வாடிக்கையாளருக்கு நியாயமான விலைகளில் தரமான பொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும்.

இந்நிகழ்வில் அத்தனகல்ல ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த நாஹிமி உள்ளிட்ட ஏனைய தேரர்கள், அத்தனகல்ல பிரதேச சபை தவிசாளர் பிரியந்த புஷ்பகுமார உள்ளிட்ட ஏனைய  பிரதேச சபை உறுப்பினர்கள், வரையறுக்கப்பட்ட அத்தனகல்ல பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் சட்டத்தரணி ஹேமந்த நாகொட விதான உட்பட பணிப்பாளர் சபையினர் மற்றும் பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.