எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

கல்குடா பட்டதாரிகள் சங்கம் 26.12.2021 ஞாயிற்றுக்கிழமை  நடாத்திய பல்கலைக் கழகங்களுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வரவேற்பும், வெளியேறுகின்ற மாணவர்களை கெளரவிப்பு விழாவும் இடம் பெற்ற போது அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி MCA.நாஸர் அவர்கள் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

அங்கு கருத்து தெரிவிக்கும் போது பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் எத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டாலும் அத்துறையில் கற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அத்துறையில் உச்ச மட்டத்தில் இலக்கைக் கொண்டதாக படிக்க வேண்டும். அப்போதுதான் அது தமக்கும் தம்மை சார்ந்தவர்களுக்கும் நன்மைகள் பயக்கக் கூறியதாக இருக்கும். 

கலைத் துறையாகவோ,வர்த்தக துறையாகவோ,பொறியியல் துறையாகவோ,மருத்தவ துறையாகவோ இருக்கலாம் ஆனால் அவற்றில் சிறந்து விளங்குபவராகவும் நிபுணத்துவம் உடையவர்களாக இருக்க வேண்டும். 

பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற நீங்கள் சிறந்த ஆளுமை விருத்தியினையும்,மொழி வாண்மையினையும்,ஒழுக்க விழுமியங்களையும் மற்றும் ஏனைய திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் தாம் பெற்றுக் கொள்ளக்கூடிய பட்டத்தோடு நின்று விடாது மேலும் உயர் கல்வியைப் பெற்று தம்மை வலுப்படுத்திக் கொள்வதோடு தொடர்ந்து படிக்க கூடியவர்களாகவும்,கற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும் மிளிர வேண்டும். கருத்துரையிடுக

Blogger இயக்குவது.