கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (MLSC) நிறுவனம் வருடாந்தம் நடாத்தி வரும் இலவச கத்னா நிகழ்வு இம்முறை 18வது தடவையாக இன்றைய தினம் (19) MLSC இல் நடைபெற்றது. 

கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிலின் ஸ்தாபக தலைவரும், சியன ஊடக வட்டத்தின் தலைவரும், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், தற்போதைய ஆலோசகருமான அல்ஹாஜ் எம்.இஸட்.அஹ்மத் முனவ்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுபோவிலை போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவை சேர்ந்த சிரேஷ்ட வைத்தியர் அஹ்மத் ரிஷி மற்றும் வைத்தியர் அரூஸ் ஆகியோர் பங்குபற்றினர். 

இதன்போது கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட, திஹாரிய, அத்தனகல்ல, பஸ்யாலை, கல் - எளிய, பூகொட, வரக்காப்பொல, எஹலியகொடை உட்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு இலவச கத்னா செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் நிறுவனத்தின் உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், சிறுவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

18வது தடவையாகவும் இடம்பெற்ற இலவச கத்னா நிகழ்வு தொடர்பில் முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் நிறுவனத்தின் செயலாளர் இர்ஷாத் ஆசிரியர்

Posted by SiyaneNews.com - Siyane Media Circle on Sunday, December 19, 2021
(Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.