கடையாமோட்டை தேசிய பாடசாலையில் Noora Al Ghais இருமாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா

 விழாவில்,

Noora Al Ghais இருமாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு!

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (R/O Plant) கையளிப்பு!

பல்லூடக தொகுதி (Multimedia Projector) கையளிப்பு!

விஞ்ஞான பிரிவில் பல்கலைக்கழகம் சென்ற மாணவர்கள் கௌரவிப்பு!

 பு/கடையாமோட்டை தேசிய பாடசாலையில் Noora Al Ghais இருமாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று முன்தினம் (14) பாடசாலையின் அதிபர் M.H.M.தௌபீக் தலைமையில் மிகவிமர்சையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றியாஸ், அல் ஹிமா இஸ்லாமிய அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.ஏ.நூருல்லாஹ் (நளீமி), குவைத் நாட்டின் இலங்கை தூதுவரின் பிரதிநிதி அஷ்ஷெய்க் முஹம்மத் பிர்தௌஸ் (நளீமி), இலங்கை இஸ்லாமிக் கெயா செண்டர் அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.ஷரூக் (கபூரி) மற்றும் மதுரங்குளி முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.றிஸ்வி, மதுரங்குளி பொலிஸ் பொறுப்பதிகாரி கே.கே.ஜீ.விக்கிரம சிங்க  முந்தல் மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவரும், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளருமான ஏ.எச்.எம்.ஹாரூன், மதுரங்குளி வார்த்தக சங்க தலைவர் எம்.எஸ்.டீ. அமான் விஞ்ஞான அபிவிருத்தி குழு செயலாளர் சீ.எம்.தாவூத், பெற்றோர்கள்,பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

NOORA AL GHAIS இருமாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு!

முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், பொது ஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளருமான ஏ.எச்.எம். றியாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க குவைத் நாட்டின் இஸ்லாமிக் செண்டர் ஊடாக இலங்கை அல் ஹிமா அமைப்பின் மேற்பார்வையின் கீழ் இக்கட்டிடம் அமையப்பெற உள்ளது.

குடிநீர்  சுத்திகரிப்பு இயந்திரம் (R/O Plant) கையளிப்பு!

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றியாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க கிராமிய மற்றும் குடிநீர் வழங்கல் மற்றும் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேராவின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலையில் அமையப்பெற்றுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கையளிக்கப்பட்டது.

பல்லூடக தொகுதி (Multimedia Projector) கையளிப்பு!

பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கினங்க நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.றிஸ்வி ஊடாக  கையளிக்கப்பட்டது.

விஞ்ஞான பிரிவில் பல்கலைக்கழகம் சென்ற மாணவர்கள் கௌரவிப்பு!

கடையாமோட்டை தேசிய பாடசாலையில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்று இதுவரையில் பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு டெப் இயந்திரங்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதனை பாடசாலையின் விஞ்ஞான அபிவிருத்தி குழு ஏற்பாடு செய்திருந்தது.

இவ்விழாவினை பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் ஏ.எச்.எம்.ஹாரூன் தலைமையிலான குழுவினரும், பாடசாலை விஞ்ஞான அபிவிருத்தி குழு செயலாளர் சீ.எம்.தாவூத் தலைமையிலான குழுவினரும், பழைய மாணவர் சங்க செயலாளர் ஜே.ஜெஸீர் தலைமையிலான குழுவினர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.












கருத்துரையிடுக

Blogger இயக்குவது.