வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் "உங்களுக்கு வீடு, நாட்டுக்கு நாளை - சுற்றாடல் நட்பு விவசாயம் மூலம் பசுமையான உலகத்தை நோக்கி" வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தற்போது வரை தொம்பே தேர்தல் தொகுதியில் 274 வீடுகளுக்கான கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், 85 வீடுகள் மக்களுக்கு கையளிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 5 வீடுகள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. மேலும், வீடுகளை பெற்றுக்கொள்வதற்கு தகுதியுள்ள 79 பேருக்கு காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. 

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலகவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, தொம்பே பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் வீரரத்ன உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.