2022 ஆண்டு T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.
2022 ஆண்டுக்கான T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) நேற்று (21) வெளியிட்டுள்ளது.16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்தியா உள்பட 12 அணிகள் நேரடியாக குரூப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
எஞ்சிய 4 அணிகள் தகுதிச்சுற்றுகளில் வெற்றிபெற்று குரூப் சுற்றுக்குள் நுழைய உள்ளன.
ஐஐசி 20 T உலகக்கோப்பை தொடருக்ருக்கு அமைவாக குரூப் சுற்றுக்குள் நுழைவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் அக்டோபர் 16 ஆம் திகதி தொடங்குகிறது.
அதன் பின்னர், அக்டோபர் 22 ஆம் திகதி சனிக்கிழமை T20 உலகக்கோப்பையின் லீக் சுற்றுப்போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
லீக் சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா எதிர்கொள்கிறது.
அதேவேளை, இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 23ஆம் திகதி பெர்ன் எம்சிஜி மைதானத்தில் நடைபெறுகிறது.
T20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி நவம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பெர்ன் எம்சிஜி மைதானத்தில் நடைபெறுகிறது.
அரசாங்க தகவல் திணைக்களம்